http://debian.org/logos/openlogo-nd-50.png http://debian.org/Pics/debian.png

Portal/IDB/logo_portal.png டெபியன் அறிமுகப் பக்கத்திற்கு வருக


Portal/IDB/icon-presentation-32x32.png முற்றிலும் புதிய ஒருவருக்கு டெபியன் குறித்த அறிமுகத்தினையும் தொடர்புடைய பிற பக்கங்களையும் விளக்க இவ் வறிமுகப் பக்கம் உதவும். இதில் நுட்பச் சொற்கள் எதுவும் பயன்படுத்தப் படவில்லை. "டெபியன்" என்றால் என்ன என்பதையும் அதனைத் தாங்கள் எங்ஙனம் பயன்படுத்தலாம் என்பதனையும் இதன் மூலம் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.


தங்களின் கணினிக்கான கட்டற்ற இயங்கு தளங்களுள்டெபியனும் ஒன்று. தங்களின் கணினியை இயக்கத் தேவையான அடிப்படை நிரல்களையும் பயன்பாடுகளையும் கொண்டது இயங்கு தளமாகும். டெபியன் லினக்ஸ் கருவினைப் பயன்படுத்துகிறது (இயங்குதளத்தின் முக்கிய பகுதி). ஆயினும் இயங்கு தளத்துக்கான அடிப்படைக் கருவிகள் குனுத் திட்டத்திலிருந்து வருகின்ற காரணத்தால் குனு/ லினக்ஸ் என்று அழைக்கப் படுகிறது.

முழுமையானதொரு இயங்குதளமென்று டெபியனைச் சொல்லலாம்: செவ்வனே முன்னொடுக்கம் செய்யப்பட்டு தங்கள் கணினியில் நிறுவத் தயார் நிலையிலுள்ள 18733 க்கும் அதிகமாகப் பொதிகளுடன் கிடைக்கப் பெறுகிறது.

தாங்கள் குனு/ லினக்ஸுக்குப் புதியவரா? எங்கே துவங்குவது என்று புரியாது நிற்கின்றீர்களா! அதற்கென இருக்கும் பல விடங்களில் இதுவும் ஒன்று. கீழ்காணும் இணையப் பக்கங்களின் உதவியினையும் நாடலாம்.

http://debian.org/intro - முறையான அறிமுகம்
http://debian.org/doc - முறையான ஆவணமாக்கம்

டெபியனை நிறுவும் முறை

தங்களுக்கு உகந்ததென டெபியனைக் கருதி அதனை நிறுவ விழைந்திடின்.

புற இணைப்புகள்


CategoryPortal | CategoryQuickIntroduction